தெங்கு ரசாலிதான் அம்னோ தலைவராக வேண்டும்- கீர் தோயோ

ஜூன்  30இல்  நடைபெறும்   அம்னோ    தலைவர்    தேர்தலில்   குவா  மூசாங்  எம்பி   தெங்கு   ரசாலி   தலைவராக   தேர்ந்தெடுக்கப்படுவதையே   சிலாங்கூர்   முன்னாள்   மந்திரி   புசார்    முகம்மட்  கீர்   தோயோ    விரும்புகிறார்.

அஹமட்  ஜாஹிட்   ஹமிடியும்  கைரி    ஜமாலுடினும்   முன்னாள்   பிரதமர்   நஜிப்  அப்துல்   ரசாக்கின்  நிர்வாகத்தில்   அமைச்சர்களாக   இருந்தவர்கள்.  அவர்கள்மீது   குற்றம்குறை   சொல்லலாம்.  ஆனால்,    தெங்கு   ரசாலிமீது   எந்தக்   குற்றம்   சொல்ல   முடியாது  என்றாரவர்.

ஜாஹிட்டும்   கைரியும்   அம்னோ  ஒரு  நல்ல   எதிர்க்கட்சியாக   உருவாக்கப்  போவதாக  வாதாடலாம்.  ஆனால்,  அவர்கள்   சொல்லும்   எதையும்  பக்கத்தான்   ஹரப்பான்  காதுகொடுத்துக்    கேட்காது.

“குற்றம் குறையுள்ளவர்கள்     சொல்லும்   கருத்துகளைச்  செவிமடுக்க  மாட்டார்கள்.  நாடு   பிரச்னைகளில்   சிக்கிக்   கொண்டிருப்பதற்குக்  காரணமே   நீங்கள்தான்.  அதனால்  அதிகம்   பேசாமல்   மூடிக்   கொண்டிருங்கள்  என்பார்கள்”,  என  கீர்   தோயோ   மலேசியாகினி  நேர்காணல்   ஒன்றில்   கூறினார்.

தாமே   அதற்கு   ஓர்   எடுத்துக்காட்டு   என்று  கூறியவர்,  பக்கத்தான்  ரக்யாட்  2008-இல்   சிலாங்கூரைக்  கைப்பற்றியபோது   தாம்  முன்வைத்த    அத்தனை   பரிந்துரைதுரைகளும்   நிராகரிகக்ப்பட்டன   என்றார்.

“அவர்கள் ‘சிலாங்கூரின்  வீழ்ச்சிக்கு   நீதான்  காரணம்’    என்றார்கள். என்   கருத்துகள்   எதுவும்   எடுத்துக்கொள்ளப்படவில்லை”,  என்றார்.

அம்னோ   இடைக்காலத்   தலைவர்   ஜாஹிட்   எதிர்கட்சித்   தலைவராக  இருக்க  பொருத்தமற்றவர்    என்றும்  கீர்  குறிப்பிட்டார்.

“தெங்கு  ரசாலியை   அப்படியெல்லாம்   ஒதுக்கிவிட   முடியாது”.

கைரி,  இளைஞர்  பிரிவுக்கு   ஒரு   தலைவரை   உருவாக்கத்   தவறிவிட்டார்.

“அம்னோ  இளைஞர்  அணி   பலவீனமாக   உள்ளது.  கைரி   தான்   மட்டுமே    தலைவராக   இருக்க   வேண்டும்  என்று   நினைக்கிறார். வேறு  யாரும்   தலைவராவதை     அவர்  விரும்புவதில்லை.

“இளைஞர்   அணியை   அவர்  வலுப்படுத்தி   இருந்தால்  நானே   அவர்  தலைவராவதை    ஆதரிப்பேன்”,  என்றவர்   சொன்னார்.