அரசாங்கத்தை வழிநடத்தும் பக்கத்தான் ஹரப்பானில் பிகேஆரும் டிஏபியும்தான் பெரிய கட்சிகள். இரண்டும் சேர்ந்து நாடாளுமன்றத்தில் ஹரப்பான் கொண்டுள்ள இடங்களில் 73.6 விழுக்காட்டைப் பெற்றுள்ளன.
ஆனால், பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் அமைச்சரவையில் அவற்றுக்கு ஒதுக்கப்பட்டிருப்பது 50 விழுக்காட்டு இடங்களே.
அமைச்சர்களாகவும் துணை அமைச்சர்களாகவும் இருப்பவர்களில் பெரும்பாலோர் பெர்சத்துவையும் அமனாவையும் சேர்ந்தவர்கள்.
பெர்சத்து 13 எம்பிகளையும் அமனா 11 எம்பிகளையும் வைத்துள்ளது. ஆனால், அவர்களில் முறையே 12 பேரும் 10 பேரும் அமைச்சர்களாக அல்லது துணை அமைச்சர்களாக உள்ளனர்.
வாரிசான் 8 எம்பிகளை வைத்துள்ளது. அவர்களில் ஐவர் அமைச்சர்கள் அல்லது துணை அமைச்சர்கள்.