கேஜே: அரசியல் நோக்கத்துக்காக ஜிஎஸ்டி-யை இரத்துச் செய்வது நல்லதல்ல

பொருளாதாரக்  கொள்கைகளை  முடிவு   செய்வதில்   அரசியலுக்கு  இடமளிக்கக்  கூடாது  என  கைரி  ஜமாலுடின்   பக்கத்தான்  ஹரப்பான்  அரசாங்கத்தைக்   கேட்டுக்கொண்டார்.

ஜிஎஸ்டியை  இரத்துச்  செய்வதற்கு   எதிர்ப்புத்   தெரிவித்த   ரெம்பாவ்  எம்பி,  இதுபோன்ற   விவகாரங்களை   அறிவார்ந்த   முறையில்    அணுக   வேண்டும்   என்றார்.

“இது  ஒரு  மிகப்  பெரிய    அரசியல்   விவகாரம்    என்பதை    அறிவேன்.  ஆனால்,  இதை   அறிவுபூர்வமாக   அணுக   வேண்டும்.  அரசியலுக்காக   ஜிஎஸ்டியை  அகற்றக்  கூடாது.

“வேண்டுமானால்  வரி   விகிதத்தைக்  குறைக்கலாம். பொருளாதாரக்  கொள்கைகளை   அரசியல்  தீர்மானிக்க   இடமளிக்கக்கூடாது”,  என்றவர்  டிவிட்டரில்  பதிவிட்டிருந்தார்.

எஸ்எஸ்டி-யைக்  காட்டிலும்   ஜிஎஸ்டி  பயனான  வரி  என்று  கைரி  கூறினார்.