ரோஸ்மாவின் நகைகள் மீதான சுங்கத்துறை விசாரணை தொடர்கிறது

லெபனானிய நகை  நிறுவனம்  ஒன்றிலிருந்து முன்னாள் பிரதமர்  நஜிப்   அப்துல்  ரசாக்கின்  துணைவியார்  ரோஸ்மா மன்சூருக்கு அனுப்பப்பட்ட நகைகள் குறித்து சுங்கத்துறையில்    முறையாக    அறிவிக்கப்பட்டுள்ளதாக   எனச் சுங்கத்துறை  இன்னும்  விசாரணை   செய்து  கொண்டுதான்  இருக்கிறது.

இன்று   ஒரு   நிகழ்வில்    கலந்துகொண்ட    சுங்கத்  தலைமை இயக்குநர் டி.சுப்ரமணியத்திடம்    செய்தியாளர்கள்   நகை   விவகாரம்     என்னவாயிற்று     என்று  கேட்டு  துளைத்தெடுத்தனர்.

“இன்னும்  விசாரித்துக்  கொண்டுதான்   இருக்கிறோம்”,  என்று   பதிலுரைத்த   அவர்   மேலும்  விவரிக்கவில்லை.

இதற்குமுன்பு   மலேசியாகினி,  லெபனானிய நகைக் கடை ஒன்று   பிப்ரவரி    மாதம்   ரோஸ்மாவுக்கு  44  நகைகளை  அனுப்பியதாக     செய்தி   வெளியிட்டிருந்தது.

அந்த   நகைகள்   இப்போது   போலீசார்   வசமுள்ளது.  1எம்டிபி   தொடர்பான   சோதனைகளின்போது   அவை   போலீசாரால்   பறிமுதல்    செய்யப்பட்டன.

இதனிடையே  அந்த  நகை  நிறுவனம்,  குளோபல்  ராயல்டி,  யுஎஸ்$14.79  மதிப்புள்ள   அந்த  நகைகளைத்   திருப்பிக்  கொடுக்குமாறு   கேட்டு    ரோஸ்மாமீது   வழக்கு  தொடுத்துள்ளது.