இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சர் முஜாஹிட் யூசுப் ராவா, குறைந்த வயது திருமணங்களைக் கண்டிக்கிறார். அது சிறார் உரிமைகளை மறுக்கிறது, தேச நிர்மாணிப்பையும் சீரழிக்கிறது.
மலேசியாகினியிடம் பேசிய முஜாஹிட் சிறார் திருமணத்தைத் தடுக்க வேண்டும் என்றார். சில சட்டங்கள் அதற்கு இடமளிப்பதாகக் கூறிய அவர், அவை மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
“சட்டங்களைத் திருத்த வேண்டும். ஷியாரியா மற்றும் சிவில் சட்ட வல்லுனர்கள் ஒன்றாக அமர்ந்து ஒருமித்த முடிவு காண வேண்டும்”, என முஜாஹிட் கூறினார்.
பல்வேறு தரப்பினரும் கூறுவதுபோல் குறைந்த வயது திருமணம் என்பது “குழந்தைகளிடம் தவறாக நடந்து கொள்ளுதல், சிறார் பாலியல் வன்கொடுமை”, என்றவர் கண்டனம் தெரிவித்தார்.
“சமூக நிலை, குறிப்பாக வறுமையின் காரணமாக சிறார்கள் தவறாக பயன்படுத்திக் கொள்ளப்படுகிறார்கள்.
“அவப்பேறாக, நம் சட்டங்கள் 16வயதுக்குக் குறைந்த பெண்கள் ஒப்புதலுடன் மணம் புரிந்துகொள்ள அனுமதிக்கின்றன. குறைந்த வயதில் மணம் செய்துகொள்ள மந்திரி புசாரிடம் அனுமதி பெற முடியும்”, என பிரதமர்துறை அமைச்சரான முஜாஹிட் கூறினார்.