தையல் பயிற்சி வகுப்புகள்  

 

கடந்த பொதுத் தேர்தலில் கோல லங்காட் மக்களுக்கு வாக்களித்தபடி ஏழை மற்றும் குறைந்த வருமானம் பெறும்   குடும்பங்களுக்கு  உதவும்  வண்ணம், ஏழை குடும்ப மாதர்களுக்கு சில கைத்தொழில் பயிற்சிகளை வழங்கும் பணிகளை எண் 54-56 ஜாலான் உத்தாமா 2, தாமான் ஜெயா, தெலுக் பங்லீமா காராங்கில்  செயல்பட்டுவரும் கோல லங்காட் நாடாளுமன்ற \ சிஜாங்காங் சட்டமன்ற மக்கள் சேவை மையத்தில் மேற்கொண்டு வருவதாக கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கூறினார்.

 

தையல் கலையில்  தேர்ச்சிபெற்ற போதனையாளரை கொண்டு ஆரம்ப அடிப்படை பயிற்சி கடந்த 4 வாரங்களாக நடத்தப்பட்டது, பட விளக்கம், அதில் தேர்வுபெற்ற முதல் சுற்று மாணவர்கள் சான்றிதழ்களுடன் காணப்படுகிறார்கள்.

 

இதில் உடல் ஊனமுற்றவர்கள், தனித்து வாழும் தாய்மார்கள், மற்றும் வறுமையான குடும்பங்களை சார்ந்தவர்களுக்கு முதலிடம் வழங்கப்படும். இது குறித்து மேலும் தகவல் பெறவும், பயிற்சியில் கலந்துக் கொள்ளவும், 017 3717830 என்ற எண்ணில் திருமதி கலையுடன்  தொடர்புக் கொள்ளும் படி கேட்டுக் கொள்கிறோம்.

 

அடுத்தகட்டமாக  பஞ்சாபி ஆடை தைக்கும் பயிற்சி வழங்கப்படும்,  இது வாரம் 90 நிமிடங்களுக்கு 7 வாரங்கள் நடத்தப்படவுள்ளது. ஒரு வகுப்பில் சுமார் 15 மாணவர்கள் மட்டுமே  அனுமதிக்கப் படுவதால், ஆர்வம் உள்ளவர்கள், குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட  குடும்ப மாதர்கள் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று  கேட்டுக்கொண்டார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும், கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினரும், நீர், நிலம் இயற்கை வள அமைச்சருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.