முன்னாள் அமைச்சர் முஸ்தாபா முகமட் அம்னோவிலிருந்து விலகினார்

 

முன்னாள் அனைத்துலக வாணிப மற்றும் தொழில் அமைச்சர் முஸ்தாபா முகமட் அம்னோவிலிருந்து விலகி விட்டார்.

ஜெலி நாடாளுமன்ற உறுப்பினர் முஸ்தாபாவின் விலகல் அதிர்ச்சி அளித்துள்ளது, ஏனென்றால் கடந்த ஜூனில் நடைபெற்ற கட்சித் தேர்தலில் அவர் மிகப் பெரும்பான்மையான வாக்குகளுடன் அம்னோ உச்சமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார்.

அவரது விலகளுடன் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 50க்கு சரிந்து விட்டது. பிகேஆருக்கும் 50 உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு, 40 ஆண்டுகள் அம்னோவுக்கு சேவையாற்றிய பின்னர், தாம் இந்த முடிவை எடுத்ததாக அவர் இன்றிரவு வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறார்.