வழக்குரைஞர் ஆர்ட் ஹருன் இசியின் புதிய தலைவர்

மூத்த வழக்குரைஞரான ஆர்ட் ஹருன் என்ற பெயரில் பிரபலமாக விளங்கும் அஸ்ஹார் அசிசான் தேர்தல் ஆணைய(இசி)த்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அஸ்ஹாரின் நியமனத்துக்கு யாங் டி பெர்துவான் ஆகோங் சுல்தான் ஐந்தாம் முகம்மட் இணக்கம் தெரிவித்திருப்பதாக அரசாங்கத் தலைமைச் செயலாளர் இஸ்மாயில் பக்கார் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

முகம்மட் ஹாஷிம் அப்துல்லா ஜூலை மாதம் முன்கூட்டியே பணி ஓய்வு பெற்றதை அடுத்து அஸ்ஹார் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்.