யார் சிஎம், மூசாவா, ஷாபி அப்டாலா? இன்று பிற்பகல் தீர்ப்பு

சாபாவின் சட்டப்பூர்வ முதலமைச்சர் முகம்மட் ஷாபி அப்டாலா, மூசா அமானா என்பதை கோட்டா கினாபாலு உயர் நீதிமன்றம் இன்று பிற்பகல் மணி மூன்றுக்குத் தீர்மானிக்கும்.

ஷாபி அப்டால் சாபா முதலமைச்சராக நியமிக்கப்பட்டது செல்லாது என்றும் தாமே சட்டப்பூர்வ முதலமைச்சர் என்றும் அறிவிக்கக் கோரி மூசா நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.

அம்மனுவை அக்டோபர் 27-இல் விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி கியு ஜென் கை தீர்ப்பை நவம்பர் 7க்குத் தள்ளி வைத்தார்.