மஸ்லீ: பி40 பிரிவு பிள்ளைகளுக்கு இலவச காலை உணவு கொடுக்க கல்வி அமைச்சு ஆலோசனை

கல்வி அமைச்சு பி40 பிரிவு பிள்ளைகளுக்கு ஊட்டச் சத்து மிக்க காலை உணவை இலவசமாகக் கொடுக்கலாமா என்று ஆராய்வதாக அதன் அமைச்சர் மஸ்லீ மாலிக் கூறினார்.

பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுடன் ஜப்பானுக்கு மூன்று நாள் வருகை மேற்கொண்டுள்ள அமைச்சர், தோக்கியோவில் இடாபாஷி டயிச்சி தொடக்கநிலைப் பள்ளிக்குச் சென்றபோது இந்த ஆலோசனை தோன்றியதாகக் கூறினார்.

“அங்கு மூன்று மணி நேரம் செலவிட்டதில் நற்பண்பு நிரம்பிய ஒரூ தலைமுறையை உருவாக்குவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டேன்”, என்றவர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

பாலர்பள்ளி தொடங்கி சுத்தம் மற்றும் கட்டொழுங்குக் கலாச்சாரத்தை மாணவர்களின் மனத்தில் ஆழமாக பதிய வைக்கும் திட்டத்தையும் அமைச்சு கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.