உதவியாளர்: 1எம்டிபி வரலாற்றுப் பாடத்தில் சேர்த்துக்கொள்ளப்படும் என்று மஸ்லி கூறவே இல்லை

கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் 1எம்டிபி விவகாரம் பள்ளி வரலாற்றுப் பாடத்தில் சேர்த்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்ததாக வெளிவந்துள்ள செய்திகள் தவறானவை என்று அமைச்சரின் உதவியாளர் ஷாருல் அமான் முகம்மட் சாரி கூறினார்.

“பொந்தியான் எம்பி(அஹமட் மஸ்லான்)-இன் கூடுதல் கேள்விக்குப் பதிலளித்த மஸ்லி, 1எம்டிபி விவகாரம் மலேசிய வரலாற்றில் இடம்பெறும் என்று மட்டுமே சொன்னார்”, என ஷாருல் ஓர் அறிக்கையில் கூறினார்.

அதைப் பாடத் திட்டத்தில் சேர்த்துக்கொள்வது குறித்து கல்வி அமைச்சின் பாடத் திட்ட ஆய்வுக்குழுதான் முடிவு செய்ய வேண்டும் என்றாரவர்.

ஊடகங்கள் செய்தியில் திருத்தம் செய்து வெளியிட்டு ஏற்பட்டுள்ள குழப்பத்தைப் போக்க ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.