’ஒரு மில்லியன் வேலைகளை உருவாக்கும் வாக்குறுதியை ஹரப்பான் நிறைவேற்றும்’

பக்கத்தான் ஹரப்பான் தேர்தல் அறிக்கையில் ஒரு மில்லியன் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது வெறும் பேச்சல்ல என்று மனிதவள அமைச்சர் குலசேகரன் கூறினார்.

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் ஆற்றல் அரசாங்கத்துக்கு உண்டு என்று கூறிய அமைச்சர் இப்போது மனிதவளம் போதுமான அளவில் இல்லாதிருப்பதுதான் பிரச்னை என்றார்.

“தொழிலாளர்களுக்குப் பற்றாக்குறை நிலவுகிறது. நாட்டின் வருமானம் பெருக உதவும் என்பதால் திறன்வாய்ந்த தொழிலாளர் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன”, என்று குலசேகரன் இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது கூறினார்.

“குறைந்தபட்ச சம்பளத்தை ரிம1,500ஆக உயர்த்துவது அரசாங்கத்தின் கொள்கையாகும். ஐந்தாண்டுகளில் அதை அடைய முடியும்.

“முதற்படியாக ஜனவரி 19 தொடங்கி குறைந்தபட்ச சம்பளம் ரிம1,100-இலிருந்து ரிம1,100 ஆக உயர்த்தப்படுகிறது”, என்றாரவர்.