இன்று காலை, சுமார் 130 லைனஸ் தொழிலாளர்கள், நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்; தங்கள் வேலைகளைக் காப்பாற்றுமாறு அரசாங்கத்திற்குக் கோரிக்கை விடுத்து, அவர்கள் ஒரு மனுவைச் சமர்ப்பித்தனர்.
“இன்று நாங்கள் லைனஸ் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவம் செய்கிறோம், லைனஸ் நிர்வாகத்தின் பிரதிநிதிகள் அல்ல.
“எங்களுக்கு நீதி வேண்டும், வேலை பாதுகாப்பு வேண்டும்.
“(நாங்கள்) லைனஸ் மலேசியாவின் மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், அடிமட்ட வேலையாட்கள் என அனைத்து உள்ளூர் தொழிலாளர்களையும் உள்ளடக்கியுள்ளோம்,” என அதன் மனித வள நிர்வாகி, ஜுமஆட் மன்சோர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மலேசிய லைனஸ் ஊழியர்களில், 3 விழுக்காட்டினர் மட்டுமே ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்கள், மற்றவர்கள் அனைவரும் உள்ளூர் பணியாளர்கள் என்று அவர் மேலும் சொன்னார்.