சீ ஃபீல்ட் ஆலய விவகாரம்: இந்து  சங்கம் விலகி நிற்க வேண்டும்- வேதமூர்த்தி

சுபாங் ஜெயாசீ ஃபீல்ட் அருள்மிகு மாரியம்மன் ஆலயப் பிரச்சினையில்  மலேசிய இந்து  சங்கம் விலகிநிற்க வேண்டும் என்று பிரதமர் துறை அமைச்சர்  பொன்.வேத மூர்த்தி வலியுறுத்தி உள்ளார்.

தேசிய அளவில் பிரதிபலித்த இந்தப் பிரச்சினைக்கு அமைதியாகவும் அதேவேளை அனைத்துத்தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் தேசிய சட்டத் துறைத்  தலைவர் (.ஜி.) ஒரு சுமுகமான தீர்வை கண்டுள்ள நிலையில்மலேசிய இந்து சங்கம் புதுக் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது.

மலேசிய இந்து சங்கத் தலைவர் மோகன் ஷான் வெளியிட்டுள்ள அறிக்கையின்படிசீ ஃபீல்ட் ஆலயம்தற்பொழுது எட்டிவரும் ஒரு சுமூகமான சூழலைக் கெடுக்கவும் தேசிய சட்டத்துறைத் தலைவருக்கே வழிகாட்டவும் முயல்வதாகத் தெரிகிறது.

அரச நடைமுறைச் சட்டம், 9-ஆவது பிரிவுசட்டத் துறைத் தலைவருக்கு அளித்துள்ள அதிகாரவரம்பிற்குட்பட்டும் பொது அமைதியில் நாட்டம் கொண்டும் சட்டத்துறைத் தலைவர் எடுத்துள்ளமுடிவை இந்த ஆலயம் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இப்படிப்பட்ட சுமூகமான சூழலில்வெண்ணெய் திரண்டு வருகின்ற  நேரத்தில் தாழியை உடைக்கமுயல்வதைப்போலமோகன் ஷான்கெடுக்கின்ற விதமாகவும் குழப்பம் ஏற்படுத்தும் வகையிலும் அறிக்கை விடுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

நாட்டின் சட்டத்துறைத் தலைவரின் ஒருங்கிணைப்பின்வழி எடுக்கப்பட்டுள்ள முடிவிற்கு அனைத்துத்தரப்பினரும் இசைவும் ஒப்புதலும் தெரிவித்துள்ள நிலையில்மோகன் ஷான் மட்டும் இந்த ஆலய சிக்கல் தொடர்பான தெளிவும் புரிதலும் இல்லாமல் அறிக்கை வெளியிட்டு பொதுமக்களுக்கு தவறாக வழிகாட்ட முயலக் கூடாதென்று இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி மேலும் கூறினார்.

-நக்கீரன்