கூட்டணியில் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்னதாகவே உறுப்பினர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ள மலாக்கா முன்னாள் முதலமைச்சர் ரஹிம் தம்பி சிக்குடன் பக்கத்தான் ஹரப்பான் எப்படி ஒத்துழைக்க முடியும் என்று ராம்கர்பால் கேட்கிறார்.
ரஹிம் ஒரு கறை படிந்த தலைவர் என்றும் பெர்சத்துவில் சேருவதற்கான அவரின் மனுவை கட்சி நிராகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதற்காக கோட்டா மலாக்கா நாடாளுமன்ற உறுப்பினர் கூ போய் தியோங் மீது வழக்கு தொடர்வது பற்றி ஆலோசித்து வருவதாக ரஹிம் கூறியிருந்ததற்கு எதிர்வினையாற்றிய ராம் இவ்வாறு கூறினார்.
கூ மீது வழக்குத் தொடரப் போவதாக ரஹிம் விடுத்திருக்கும் மிரட்டல் தேவையற்றது என்று கூறிய ராம்கர்பால், ரஹிம் ஹரப்பானில் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்பே அவர் அதன் உறுப்பினர்களை மிரட்டுகிறார். இப்பேர்ப்பட்டவர்களுடன் எப்படி ஒத்துழைக்க முடியும் என்று புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினரான ராம்கர்பால் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கேட்டுள்ளார்.