ஸாகிட் அம்னோ தலைவர் பொறுப்பை துணைத் தலைவரிடம் ஒப்படைத்தார்

 

பாகன் டத்தோ நாடாளுமன்ற உறுப்பினரான அஹமட் ஸாகிட் ஹமிடி கட்சியில் கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக அம்னோ தலைவர் பதவியிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார்.

தமது துணைத் தலைவர் முகமட் ஹசான் அம்னோ தலைவர் பொறுப்புகளை இப்போது ஏற்றுக்கொள்கிறார் என்று ஸாகிட் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறார்.

கட்சியில் இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியின் விளைவாக நான் அம்னோ தலைவர் பொறுப்புகளை துணைத் தலைவரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளேன் என்றாரவர்.

இனிமேல் நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து விலகக்கூடாது என்று வலியுறுத்துகிறேன் என்று அவர் கூறினார்.

பின்னர் செய்தியாளர்கள் அவரைச் சந்தித்த போது, தாம் இராஜினாமா செய்யவில்லை என்றும் கட்சியை முகம்மட் வழிநடத்துவதற்காக விடுப்பில் செல்கிறேன் என்றும் கூறிய ஸாகிட், இது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் வெளியேறிக் கொண்டிருப்பதலிருந்து கட்சியைக் காப்பாற்றும் நோக்கம் கொண்டது என்று ஸாகிட் மேலும் கூறினார்.