நெகிரி ஆட்சியாளர் முஸ்லிம் சமூகப் பிரச்சனைகள், குற்றச்செயல்கள் குறித்து கவலை தெரிவித்தார்

 

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் சமூகப் பிரச்சனைகள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருப்பது பற்றி நெகிரி செம்பிலான் யாங் டி-பெர்த்துவான் பெசார் துவாங்கு முகிரிஸ் துவாங்கு முனாவிர் இன்று ஆழ்ந்த கவலை தெரிவித்தார்.

புள்ளிவிபரங்கள் அடிப்படையில், போதைப் பொருள் விவகாரங்கள் சம்பந்தமாக கைது செய்யப்பட்டவர்களில் 90 விழுக்காட்டிற்கு மேற்பட்டவர்கள் முஸ்லிம்கள், குறிப்பாக ஜெம்போல் பெல்டா பகுதிகள்; கற்பழிப்பு சம்பந்தப்பமாக குற்றம் சாட்டப்பட்ட 83 பேரில் 64 பேர் முஸ்லிம்கள் என்று அவர் கூறினார்.

சட்டம் மற்றும் சமுதாயம் ஆகியவற்றால் தடைசெய்யப்பட்டவர்களுடனான உடல் உறவு சம்பந்தமாக இவ்வருடம் அறிவிக்கப்பட்ட 10 சம்பவங்களில் 9 முஸ்லிம்கள் சார்ந்தவை என்று அவர் மேலும் கூறினார்.

இன்று, கோலா பிலாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றிய நெகிரி ஆட்சியாளர் மலேசியாவில் ‘மாட் ரெம்பிட்’ என்று கூறப்படும் இளம் வயது முஸ்லிகள் என்ற சட்டவிரோத மோட்டார் சைக்கள் பந்தயங்களில் ஈடுபடுவது மற்றும் முஸ்லிம் தீவிரதவாதிகள் இஸ்லாத்திற்குப் போராட முஸ்லிம்களைச் சேர்ப்பது பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், இப்பிரச்சனைகளைக் கையாளுவதற்கு போலீஸ் மற்றும் இதர அமலாக்கப் பிரிவுகள் கொண்டிருக்கும் திறன் மீது தமக்கு நம்பிக்கை இருப்பதாக துவாங்கு முக்ரீஸ் கூறினார்.

நாம் இப்போதே திட்டமிட வேண்டும், அத்திடங்கள் முழுவதுமாக அமலாக்கப்பட இப்போதிலிருந்து இன்னும் பத்து ஆண்டுகள் எடுத்துக்கொண்டாலும்கூட.

எதுவும் செய்யப்படாவிட்டால், சமுதாயத்திலுள்ள தீயவர்கள் எப்போதுமே மாற மாட்டார்கள் என்று அவர் மேலும் கூறினார்.