ரோன்95 ரிம1.86 ஆகத்தான் இருக்க வேண்டும்: நஜிப் கூறிக்கொள்கிறார்

அரசாங்கத்துக்கு மக்கள்தான் நிதியுதவி செய்கிறார்களாம். முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார். சுத்திகரிக்கப்படாத எண்ணெய் விலை வீழ்ச்சி கண்டுள்ள போதிலும் எரிபொருள் விலையில் மாற்றமில்லாதிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

சிங்கப்பூரில் பிளாட்ஸ் நிறுவனம் வெளியிட்ட எரிபொருள் விலை நிலவரப்படி ரோன்95 ஒரு லிட்டருக்கு ரிம1.86 ஆகத்தான் விற்கப்பட வேண்டும் என்று நஜிப் கூறினார்.

“அதன்படி பார்த்தால் பொதுமக்கள் ஒவ்வொரு லிட்டருக்கும் 34 சென் வீதம் அரசாங்கத்துக்கு நிதியுதவி செய்து வருகிறார்கள்.

“ஆனால், நம் நிதி அமைச்சர்(லிம் குவான் எங்) இதை மானக் கேடு எனக் கருதி ஒப்புக்கொள்ள மாட்டார்”, என நஜிப் முகநூலில் பதிவிட்டிருந்தார்.