கிறிஸ்மஸ் பண்டிகையை ஒட்டி பாஸ் தலைமைச் செயலாளர் தகியுட்டின் ஹசான் கிறிஸ்மஸ் வாழ்த்துத் தெரிவித்தார்.
“கிறிஸ்மஸ் கொண்டாடும் மலேசியர் அனைவருக்கும் மெர்ரி கிறிஸ்மஸ். நாம் நேசிக்கும் இந்நாட்டில் அனைவரும் அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்வோமாக.
“மலாயாப் பல்கலைக்கழகத்தின் சட்டக் கல்விப் புலத்தில் என்னுடன் பயின்ற பெரும்பாலோர் மலாய்க்காரர்- அல்லாதார்தான். இன்றும் நாங்கள் ஒரு குடும்பமாக ஒருவருடன் ஒருவர் தொடர்பு இருக்கிறோம், ஒன்றுகூடலில் சந்திக்கிறோம்.
“இஸ்லாத்தில் கருத்துவேறுபாடுகள் அருட்கொடைகளாகும்”, என்று கோத்தா பாரு எம்பி கூறினார்.
தகியுடினின் கருத்துக்கும் பாஸ் இளைஞர் தலைவர் முகம்மட் காலில் அப்துல் ஹாடியின் கருத்துக்கும் எவ்வளவு பெரிய வேறுபாடு. கிறிஸ்மஸ் கொண்டாடுவது இஸ்லாமிய போதனைக்கு எதிரானது என்பதால் முஸ்லிம்கள் அதைக் கொண்டாடக் கூடாது என்று காலில் நேற்று எச்சரித்திருந்தார்.
அண்டைவீட்டு கிறிஸ்துவ அன்பருக்கு விடுமுறைக்கால வாழ்த்து கூறலாம் ஆனால், பொதுவில், சமூக ஊடகங்களில் வாழ்த்துச் சொல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றாரவார்.