ஆடிப்-பின் பிரேதப் பரிசோதனை அறிக்கை ஒரு மாதத்தில் தயாராகும்

தீயணைப்பு வீரர் முகமட் ஆடிப் முகமட் காசிம்மின், முழுமையான பிரேதப் பரிசோதனை அறிக்கை, ஒரு மாதக் காலத்தில் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரத்தப் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று நோயியல் வல்லுநர்கள் நினைத்தால், அந்தக் கால அளவு தேவைப்படும், மேலும் விதிமுறைப்படி, ஒரு மாதம் எடுக்க வாய்ப்புள்ளது என சுகாதாரத்துறை துணையமைச்சர், டாக்டர் லீ பூன் ச்சை தெரிவித்தார்.

எனினும், காயத்தின் அடிப்படையில், மரணத்தின் உண்மையான காரணத்தைத் தெரிந்துகொள்ள முடியுமென்றால், இரத்தச் சோதனை தேவையில்லை என்றும் டாக்டர் லீ கூறினார்.