பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், பரிந்துரைக்கப்பட்ட ஈராண்டாண்டுகளுக்குமுன்பே பிரதமராக விரும்புவதாய் என்றும் கூறியதில்லை என்றார் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்.
திங்கள்கிழமை சின் சியு டெய்லி நாளேட்டுக்கு வழங்கிய நேர்காணலில் மகாதிர் இதனைத் தெரிவித்தார்.
தம்மைப் பொறுத்தவரை “ஈராண்டுகளில்” பிரதமர் பதவியை அன்வாரிடம் ஒப்படைப்பது உறுதி என்பதையும் அவர் கூறிக்கொண்டார்.
“இரண்டாண்டுகள் அல்லது அதற்கும் சற்றுக் கூடுதலாக நான் இருக்கக் கூடும். ஆனால், கொடுத்த வக்குறுதியைக் காப்பாற்றுவேன்”, என்றாரவர்.
பக்கத்தான் ஹரப்பானின் உறுப்புக் கட்சிகளில் ஒன்றான பிகேஆரின் தலைவர் என்ற முறையில் அன்வார் பிரதமராகும் தகுதி பெற்றவர் என்று மகாதிர் குறிப்பிட்டார்.
பிரதமராவதற்கு அன்வார்தான் சிறந்தவரா என்று வின்வியதற்கு அவர் கருத்துரைக்க மறுத்தார்.
“நான் அது பற்றியெல்லாம் மதிப்பீடு செய்ய விரும்பவில்லை. ஹரப்பான் அமைக்கப்பட்டபோதே எனக்கு அடுத்து அவர்தான் என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று”, என்றாரவர்.