மூத்த ரிபோர்மாசிகாரர்கள் ‘மகாதிர் ஜிஇ15வரை’ பிரதமராக இருப்பதை விரும்பவில்லை

பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் ஈராண்டுகள் மட்டுமே பிரதமராக இருக்கலாம்.   அதன் பிறகு பொதுத் தேர்தலுக்குமுன் ஒப்புக்கொண்டபடி பிரதமர் பதவியை அன்வார் இப்ராகிமிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை மூத்த ரிபோர்மாசிகாரர்கள் அடங்கிய ஒரு குழு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

ஒட்டாய் ரிபோர்மாசி என்றழைக்கப்படும் அக்குழு, கடந்த வார இறுதியில் பெர்சத்து ஆண்டுக்கூட்டத்தில் 93-வயது மகாதிர் அடுத்த பொதுத் தேர்தல்வரை பிரதமராக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் ஒரு தீர்மானம் முன்வைக்கப்பட்டது குறித்துக் கருத்துரைத்தது.

“நாங்கள் அந்த பெர்சத்து தீர்மானத்தைக் கடுமையாக எதிர்க்கிறோம்…….ஐந்தாண்டுகள் என்பது நீண்ட காலம்”, என்று ஒட்டாய் ரிபோர்மாசியின் செயலாளர் அப்துல் ரசாக் இஸ்மாயில் இன்று கோலாலும்பூரில் செய்தியாளர்களிடம் கூறினார்.

அதற்குள் என்னென்னமோ நடந்து விடலாம் என்றாரவர்.