கேமரன் மலை இடைத்தேர்தல் – ஹராப்பான் வேட்பாளராக எம் மனோகரன்

கேமரன் மலை இடைத்தேர்தலில், பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக, டிஏபி எம் மனோகரன் அறிவிக்கப்பட்டார்.

“கேமரன் மலையில், 14-வது பொதுத் தேர்தலில் போட்டியிட்ட எம் மனோகரன், மீண்டும் போட்டியிடுவார்,” என்று கோலாலம்பூரில், இன்று, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் தலைவரான துன் டாக்டர் மகாதிர் அறிவித்தார்.

மஇகா-வின் பாரம்பரிய தொகுதியான கேமரன் மலையில், போட்டி பலமாக இருக்கும் என்ற போதிலும், அங்கு ஹராப்பான் வெற்றி பெறும் என்று நம்புவதாக மகாதிர் தெரிவித்தார்.

“அங்கு நம்மை எதிர்த்து போட்டியிடப் போவது யாரென்று தெரியவில்லை, பல்வேறான கதைகள் பேசப்படுகின்றன, இருந்தபோதிலும், நாம் அத்தொகுதியை வென்றெடுப்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது,” என்றார் அவர்.