டாக்டர் எம் : எனக்கு தெரிந்து பேரரசர் பணிக்குத் திரும்பிவிட்டார்

தனக்கு தெரிந்து, பேரரசர் சுல்தான் முகமட் V பணிக்குத் திரும்பிவிட்டதாக, பிரதமர் டாக்டர் மகாதிர் கூறினார்.

இன்று, கோலாலம்பூரில், பக்காத்தான் ஹராப்பான் தலைவர்களுடனான கூட்டத்திற்குத் தலைமை தாங்கியப் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பதவி விலகல் தொடர்பாக, பேரரசரிடம் இருந்து, தான் எந்தவொரு அதிகாரப்பூர்வக் கடிதத்தையும் இதுவரை பெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

“உங்களைப் போலவே, நானும் காற்று வாக்கில் கேள்விபட்டேன்.

“ஆனால், அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் ஏதும் இதுவரை இல்லாததால், அதைப் பற்றி பேச நான் விரும்பவில்லை,” என்றார் அவர்.