மைபிபிபி கட்சி கேமரன் மலை இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து நாளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் பிஎன் உறுப்புக் கட்சிகளில் ஒன்றான மைபிபிபியின் உச்சமன்றக் கூட்டம் நாளை நடைபெறுவதாகவும் அதில் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து விவாதிக்கப்படும் என்றும் தகவலறிந்த வட்டாரமொன்று கூறிற்று.
மலேசியாகினி மைபிபிபி தலைவர் எம்.கேவியெஸ்ஸைத் தொடர்புகொள்ள முயன்றது. ஆனால், முடியவில்லை.
14வது பொதுத் தேர்தலுக்குமுன் கேவியெஸ் கேமரன் மலை தொகுதி தனது கட்சிக்குத்தான் கொடுக்கப்பட வேண்டும் என்று கடுமையாக போராடினார். ஆனால், அத்தொகுதி மஇகாவின் சி,சிவராஜுக்குக் கொடுக்கப்பட்டது.
எதிஎவரும் இடைத் தேர்தலில் பாஸும் பிஎஸ்எம்- மும் போட்டியிடவில்லை.
பக்கத்தான் ஹரப்பான் எம்.மனோகரனை வேட்பாளராகக் களமிறக்குகிறது.
பிஎன் அதன் வேட்பாளரை இன்னும் அறிவிக்கவில்லை. கேமரன் மலை காலங்காலமாக மஇகா போட்டியிடும் ஒரு தொகுதி.