கிளந்தான் எம்பி: எங்கள் சுல்தான் ஆகோங் ஆக விரும்பியதில்லை

கிளந்தான் மந்திரி புசார் அஹமட் யாக்கூப், மாநில ஆட்சியாளர் ஐந்தாம் சுல்தான் முகம்மட்டுக்கு மாட்சிமை தங்கிய  பேரரசர் ஆகும் விருப்பம் என்றும்  இருந்ததில்லை என்றார்.

“தொடக்கத்திலிருந்தே துவாங்குக்கு யாங் டி பெர்துவான் ஆகோங் ஆவதில் விருப்பம் இல்லை என்பது எனக்குத் தெரியும்.

“ஆனாலும், மன்னர் ஆனதும் அவர் தம் கடமைகளைப் பொறுப்பாகச் செய்தார்”, என்றவர் நேற்று தும்பாட்டில் கூறினார்.

நேற்று சுல்தான் முகம்மட் V யாங் டி-பெர்த்துவான் அகோங் பதவியிலிருந்து விலகுவதாக .இஸ்தானா நெகாரா அறிவித்தது.

சுல்தானின் முடிவை ஏற்பதாகக் கூறிய கிளந்தான் மந்திரி புசார், மன்னருக்குரிய பொறுப்புகளை சுல்தான் முகம்மட் V நன்றாக செய்து வந்துள்ளார் என்றார்.

“ஆகோங்காக அவர் ஆற்றிய பணிகளில் குறை காண முடியாது. ஆகோங் என்ன செய்ய வேண்டுமோ அதை அவர் முறையாக செய்தார்”, என்றவர் கூறினார்.