சீனப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட ரிம12 மில்லியன் ‘தேர்தல் இனிப்புகள்’ அல்ல, துணை அமைச்சர் கூறுகிறார்

 

புத்ரா ஜெயா 62 சுயேட்சை உயர்நிலை சீனப்பள்ளிகளுக்கும் நியு இரா யுனிவர்சிட்டி கல்லூரிக்கும் கேமரன் மலை நாடாளுமன்ற இடைத் தேர்தல் நியமன நாளுக்கு முந்திய நாளில் ரிம12 மில்லியன் வழங்குகிறது.

இது சம்பந்தமாக இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய துணைக் கல்வி அமைச்சர் தியோ நீ சிங், அமைச்சு தொடக்கத்தில் இந்த நிதிகளை இம்மாதக் கடைசியில் வழங்கத் திட்டமிட்டிருந்தது என்று கூறினார்.

பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், இந்நிதி இப்போது வழங்கப்படுதல் எதிர்வரும் இடைத் தேர்தல்களுக்கான ‘தேர்தல் இனிப்புகள்’ என்று கூறப்படுவதை மறுத்தார்.

இந்நிதி இன்று வழங்கப்படுவதில் தாம் மகிழ்ச்சியடைவதாகக் கூறிய அவர், இல்லையென்றால் இந்நிதி ஒதுக்கீட்டை எதிர்வரும் செமினி இடைத் தேர்தலின் போது கூட செய்ய முடியாது என்றாரவர்.

இன்று அதிகாலை செமினி சட்டமன்ற உறுப்பினர் பக்தியார் முகமட் நோர் காலமானார்.