ஹரப்பானை ஆதரிக்கிறார் கேவியெஸ்: அவர் மகாதிர் மற்றும் அன்வார் ஆதரவாளராம்

சர்ச்சைக்குரிய மைபிபிபி தலைவர் எம். கேவியெஸ் கேமரன் மலை இடைத் தேர்தலில் பக்கத்தான் ஹராப்பானுக்கே தம் ஆதரவு என்று அறிவித்தார். ஏனென்றால் அவர் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் மற்றும் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமின் ஆதரவாளராம்.

“ஒன்றைத் தெள்ளத் தெளிவாகக் கூற விரும்புகிறேன். நான் மகாதிர் மற்றும் அன்வார் ஆதரவாளன்.

“பிரதமரின் வலிமையும் விவேகமும் முன்னாள் ஆட்சியில் விளைந்த கேடுகளிலிருந்து நம்மை மீட்டெடுத்து முன்னுக்குக் கொண்டு செல்லப்போகிறது.

“அதே வேளை பிரதமராகக் காத்திருப்பரின் வலிமையும் தொலைநோக்குத் திறனும்தான் ஒரு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கித் தரப் போகின்றன”, என்றாரவர்.

இதற்குமுன் கேவியெஸ், கேமரன் மலை இடைத் தேர்தலில் போட்டியிடப் போவதாகக் கூறி வந்தது நினைவிருக்கலாம்.

ஆனால், இன்று காலை தானா மேரா வந்த அவர், வேட்புமனு மையத்துக்குள் செல்லாமல் பிஎன் முகாமுக்குச் சென்றார், அங்கு அம்னோ இடைக்காலத் தலைவர் முகம்மட் ஹசானைக் கட்டிப் பிடித்தார்.

அதை வைத்து அவரது பிஎன்னுக்குத்தான் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சிறிது நேரத்துக்குப் பின்னர் அவர் ஹரப்பானை ஆதரிப்பதாக அறிவித்து அனைவரையும் வியப்படையச் செய்தார்.