சங்கங்கள் பதிவு இலாகா (ரோஸ்), இன்று முதல் மைபிபிபி-யின் பதிவை இரத்து செய்துள்ளது.
இன்று, சங்கங்களுக்கானப் பதிவாளர், மஷாதி அபாங் இப்ராஹிம், இத்தகவலை ஒரு கடிதத்தின் வழி, அக்கட்சியின் தலைவர்களுக்குத் தெரிவித்தார்.
மேல்முறையீட்டில் போதியக் காரணங்கள் இல்லாததால், இம்முடிவு எடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
சங்கங்களுக்கான சட்டவிதி 1966-ன் கீழ், இம்முடிவை எதிர்த்து 30 நாள்களில் மேல்முறையீடு செய்யலாம்.
முன்னதாக, கட்சியின் தலைமைப் பொறுப்பிற்கு, இருதரப்பினர் போட்டியிட்டதனால், கட்சியில் நெருக்கடி ஏற்பட்டது.
இதற்கிடையே, எம் கேவியஸ் தரப்பு, மைபிபிபி சுதந்திரமானது என்றும், கேமரன் மலை இடைத்தேர்தலில், பக்காத்தான் ஹராப்பானை ஆதரிப்பதாகவும் அறிவித்தார்.
முன்னாள் துணையமைச்சர் மேக்லின் டி’குருஸ் தரப்பினர், மைபிபிபி பிஎன் –னுக்கு ஆதரவானது எனத் தெரிவித்தார்.
கட்சி தடை செய்யப்பட்டதற்கான அறிவிப்புக் கடிதம் இரு தரப்பினருக்கும் அனுப்பப்பட்டது.