ஜனவரி 31 பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படும் என்று கூறப்படுவதை அரசாங்கம் மறுக்கிறது.
மாட்சிமை தங்கிய மாமன்னர் பதவியேற்பதை ஒட்டி பொது விடுமுறை அறிவிக்கப்படும் என்றொரு செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
ஜனவரி 31-இல் பேரரசர் பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் நிகழ்வு மட்டும் நடைபெறும்.
அரியணை அமரும் சடங்கு அன்று நடைபெறாது. எனவே, அன்றைய தினம் பொது விடுமுறையாக அறிவிக்கப்படாது.
ஆட்சியாளர் மன்றம் ஜனவரி 24-இல் கூடி புதிய ஆகோங்கைத் தேர்ந்தெடுக்கும்.
பகாங்கின் புதிய ஆட்சியாளர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹமட் ஷாவே அடுத்த பேரரசராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
கிளந்தான் ஆட்சியாளர் சுல்தான் ஐந்தாம் முகம்மட் ஜனவரி 6-இல் பதவி விலகியதை அடுத்து ஆகோங் பதவி காலியாகவுள்ளது.