முஸ்லிம்கள் மற்றும் மலேசியாவின் எதிர்காலம் அம்னோ-பாஸ் ஒத்துழைப்பை நம்பியுள்ளது : நஜிப் கூறுகிறார்

கேமரன் மலை இடைத் தேர்தல்:  இன்று காலை ஜெலாய், கம்போங் கெலடேக்கில் உரையாற்றிய முன்னாள் பிரதமரும் முன்னாள் பிஎன் தலைவருமான நஜிப் அப்துல் ரசாக், அம்னோவும் பாஸும் “அணுக்கமாகவும் நெருக்கமாகவும்” இருப்பதைப் பாராட்டினார்.

“முஸ்லிம்களின் எதிர்காலமும் நாட்டின் எதிர்காலமும் அம்னோ-பாஸ் ஒத்துழைப்பைத்தான் நம்பியுள்ளது”, என நஜிப் பாஸ் கட்சியின் கோட்டையான அப்பகுதியில் பிஎன் ஆதரவாளர்கள் நிரம்பிய கூட்டத்தில் கூறினார்.

இடைத் தேர்தலில் பாஸ் போட்டியிடவில்லை. ஆனால், அதன் தலைவர்கள் பிஎன் வேட்பாளருக்காக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக உரையாற்றிய பகாங் மந்திரி புசார் வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் மலாய்க்காரர்கள் அவர்களின் எதிரிகளுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

“மலாய்க்காரர்கள் ஒன்றுபடவில்லை என்றால் மற்றவர்கள்தான் பயனடைவாரக்ள்”, என்றாரவர்.