எதிர்வரும் ஜனவரி 24-ம் தேதி, நாட்டின் 16-வது பேரரசர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.
மலேசிய முடியாட்சி வரலாற்றில் இதுவரை நடந்திராத ஒன்றாக, கடந்த ஜனவரி 6-ம் தேதி, நாட்டின் 15-வது பேரரசர் சுல்தான் முகமட் V பதவி விலகியதைத் தொடர்ந்து, நாட்டின் முகான்மை தலைமை பதவி காலியாக இருக்கிறது.
எனினும், எந்த நெருக்கடியும் ஏற்படாமல், இணக்கமான முறையில் அதனைத் தீர்க்கப்பட முடிந்துள்ளது.
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை, நாட்டின் பேரரசர், முறையே நெகிரி செம்பிலான், சிலாங்கூர், பெர்லிஸ், திரெங்கானு, கெடா, கிளாந்தான், பஹாங், ஜொகூர், பேராக் என தேர்ந்தெடுக்கப்படுவர்.
பட்டியலின் படி, பஹாங் மாநிலம் அடுத்த நிலையில் இருந்தாலும், தெங்கு அப்துல்லா சுல்தான் அஹ்மாட் ஷா, பஹாங் சுல்தானாக, மிக அண்மையில்தான் (ஜனவரி 15) முடிசூட்டப்பட்டதால், சென்ஷன் 4(2)(b) படி, இப்பட்டியலின் இறுதிக்கு அவர் தள்ளப்படும் சாத்தியமும் இருக்கிறது.
இருப்பினும், முடிவு ஆட்சியாளர்கள் மாநாட்டின் தீர்மானத்திற்கு உட்பட்டது.
-பெர்னாமா