இஸ்ரேலிய விளையாட்டு வீரர்கள், ஒரு குற்றவாளி நாட்டிலிருந்து வருவதால், அவர்களை மலேசியாவால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் மீண்டும் வலியுறுத்தினார்.
நமது நாட்டில் விரும்பத்தகாதவர்கள் நுழைவதைத் தடுக்க வேண்டும் என்று டாக்டர் மகாதிர் கூறினார். பயங்கரவாதிகள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களும் இதில் அடங்குவர்.
“அவர்களுடன் (இஸ்ரேல்) எந்தவொரு தொடர்பும் வைத்துகொள்ள நாங்கள் விரும்பவில்லை. அவர்கள் போட்டிகளில் பங்குபெற விரும்பினால், வேறு நாட்டிற்குச் செல்லட்டும்.
“ஒவ்வொரு நாட்டிற்கும், பிற நாட்டினர் வருகையை ஏற்க அல்லது நிராகரிக்க உரிமை உண்டு.
“ஆக, அவர்கள் ஒரு குற்றவாளி நாட்டிலிருந்து வருகிறார்கள், அவர்களை நாம் ஏற்க முடியாது,” என வியென்னா, ஆஸ்திரியாவில் ஒரு மாநாட்டில் பேசிய பிறகு, மலேசியா மற்றும் அனைத்துலகச் செய்தியாளர்களிடம் மகாதிர் பேசினார்.
-பெர்னாமா