மலேசிய நிறுவனங்களின் ஆணைய(சிசிஎம்)த்தின்மீது மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) மேற்கொண்டுள்ள புலன் விசாரணைக்கு உதவியாக அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரியின் மகன் சில ஆவணங்களை ஊழல் தடுப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்திருக்கிறார்.
20-வயதுடைய அந்நபருக்கு அந்த அரசுத் தொடர்பு நிறுவனத்தில் ரிம500 மில்லியன் பெறுமதியுள்ள ஒரு குத்தகையில் நிகழ்ந்த ஊழலில் தொடர்பிருப்பதாக நம்பப்படுகிறது என பெரித்தா ஹரியான் செய்தி கூறுகிறது.
முன்னதாக, எம்ஏசிசி சிசிஎம்-மின் மூத்த அதிகாரி ஒருவரின் மகன் அந்நிறுவனத்தில் நிகழ்ந்த ஊழல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அவர்மீது எம்ஏசிசி விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன.
எம்ஏசிசி ஜனவரி 17-இல் கோலாலும்பூரில் சிசிஎம் அலுவலகம்மீது அதிரடிச் சோதனை ஒன்றை நடத்தியது. அது, எம்ஏசிசி அந்நிறுவனத்தின்மீது நடத்திய ஐந்தாவது அதிரடிச் சோதனயாகும்