ஆண்டு வட்டி ரிம500மில்லியன், அதனால்தான் இசிஆர்எல் கைவிடப்பட்டது- அஸ்மின்

கிழக்குக் கரை இரயில் பாதை(இசிஆர்எல்)த் திட்டத்துக்கு ஒவ்வோராண்டும் செலுத்த வேண்டிய வட்டி மிக அதிகம் என்பதால் அத் திட்டத்தை இரத்துச் செய்வதென முடிவு செய்யப்பட்டதாக பொருளாதார அமைச்சர் முகம்மட் அஸ்மின் அலி கூறினார்.

அத் திட்டத்தைத் தொடரும் பட்சத்தில் ஆண்டுக்கு ரிம500 மில்லியன் வட்டி கொடுக்க வேண்டிவரும் என்பதால் அமைச்சரவை அதைக் கைவிட முடிவெடுத்தது.

வியாழக்கிழமை அமைச்சரவைக் கூட்டம் அம்முடிவைச் செய்தது. அதுவே இறுதி முடிவுமாகும் என்றவர் வலியுறுத்தினார்.

“அதை இரத்துச் செய்யவில்லை என்றால் அரசாங்கம் அதற்காக அரை பில்லியன் ரிங்கிட்டை வட்டியாகக் கொடுக்க வேண்டியிருக்கும்

“இப்போதைய நிலையில் அது நம்மால் இயலாது”, என்று அஸ்மின் இன்று கோலாலும்பூரில் தெரிவித்தார்.