கேமரன் மலை இடைத் தேர்தல்: பக்கத்தான் ஹரப்பான் சின்னம் பொறிக்கப்பட்ட சட்டை அணிந்து வாக்களிப்பு மையம் வந்தது தப்புத்தான் என்பதை கேமரன் மலை இடைத் தேர்தல் ஹரப்பான் வேட்பாளர் எம்.மனோகரன் ஒப்புக்கொண்டார்.
“அது என் தவறுதான். அதிகாலையில் அவசரமவசரமாக ஓடி வந்தேன். இசி அதிகாரி சொன்னதும் வாக்களிப்பு மையத்தை விட்டு வெளியேறி விட்டேன்”, என்றாரவர்.
இசி அதிகாரிகளால் வாக்களிப்பு மையத்திலிருந்து வெளியில் அழைத்து வரப்பட்ட மனோகரன், ஹரப்பான் சட்டவிதிகளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்று அம்னோ இடைக்காலத் துணைத் தலைவர் இஸ்மாயில் சப்ரி கூறியதையும் மறுத்தார்.
“இல்லை. நாங்கள் சட்டத்தை மதிப்பவர்கள். இது என் தவறு. அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்”, என்றார்.

























