ஹராப்பான் : கேமரன் இடைத்தேர்தல் நமக்கு ஓர் எச்சரிக்கை

கேமரன் மலை இடைத்தேர்தல் முடிவு, பிகேஆர் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் சில பலவீனங்களைச் சரிசெய்ய வேண்டியுள்ளது என்பதை நினைவுறுத்துகிறது என பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

“இது, பிகேஆர் மற்றும் ஹராப்பான் தலைவர்கள், பொருளாதாரம் மற்றும் வாழ்க்கை செலவுகள் பற்றிய மக்களின் கவலையை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்கான ஒரு நினைவூட்டல்.

“14-வது பொதுத் தேர்தல் அறிக்கையை நிறைவேற்றவும், இன, சமய பிரச்சனைகள் அனைத்தையும் விவேகமாகக் கையாளவும் நாம் கடினமாக உழைக்க வேண்டும்,” என அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறுகையில், இந்த இடைத்தேர்தலை ஒரு படிப்பினையாகக் கொண்டு, அடுத்து மார்ச் 2-ல் நடைபெறவுள்ள செமிஞ்சே இடைத்தேர்தலில், நமது குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றார்.

“நாம் தொடர்ந்து பணியாற்றினால், நமக்கு மக்களிடையே ஆதரவு பெறுகும்,” என்றும் அவர் சொன்னார்.