சட்டை விவகாரம்: மனோகரன் மீது இசி நடவடிக்கை?

கடந்த சனிக்கிழமை கேமரன் மலை இடைத் தேர்தலில் கட்சிச் சின்னம் பொறிக்கப்பட்ட சட்டை அணிந்து வாக்களிப்பு மையத்துக்குள் வந்த பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர் எம்.மனோகரன்மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசிக்கிறது.

அவரது செயல் தேர்தல் சட்டம் பிரிவு 26(1) (ஜி)-இன்கீழ் ஒரு குற்றம் என்பதால் அவர்மீது போலீசில் புகார் செய்ய வேண்டும் என்று தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெர்சே-யும் வலியுறுத்தியுள்ளது.

அவர்மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஓராண்டுச் சிறை அல்லது ரிம5,000 வரையிலான அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படலாம்.

இசி, மனோகரனின் செயலை ஆராயும் என அதன் தலைவர் அஸ்ஹார் ஹருன் கூறினார்.

“எங்கள் சட்டப் பிரிவின் ஆலோசனை நாடப்பட்டுள்ளது.

“முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும்”, என்றவர் மலேசியாகினிக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில் கூறியிருந்தார்.