நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்நோக்கிய ரிட்சுவான் பெர்சத்து உயர் பதவிகளில் ஆசை இல்லை என்கிறார்

மலாக்கா பெர்சத்து தலைவர் முகம்மட் ரிட்சுவான் கட்சியின் உயர் பதவிகள்மீது கண் வைத்திருப்பதாகக் கூறப்படுவதை மறுக்கிறார்.

ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள கட்சித் தேர்தலில் போட்டியிடும் எண்ணமெல்லாம் கிடையாது என்றும் அமைச்சர் பொறுப்பை நிறைவேற்றுவதற்கே முக்கியத்துவம் கொடுக்கப் போவதாகவும் அவர் மலேசியாகினியிடம் கூறினார். ரிட்சுவான் தொழில் முனைவர் மேம்பாட்டு அமைச்சராவார்.

ஆனால், கட்சியே இப்போது கொடுத்துள்ளதைப்போல் ஏதாவது ஒரு பதவியைக் கொடுத்தால் அதை அவர் மறுக்க மாட்டார். இப்போது அவர் பெர்சத்து உச்ச மன்ற உறுப்பினர்.

“நான் மகாதிருக்கும் முகைதினுக்கும் விசுவாசமானவன் என்பது வெள்ளிடை மலை”, என்றாரவர்.

ரிட்சுவான் இரண்டு வாரங்களுக்குமுன் கோலாலும்பூர் முன்னாள் மேயர் ருஸ்லின் ஹசானை ஆயர் லிமாவ் சட்டமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து அகற்றியதுடன் மஸ்ஜித் தானா பெர்சத்து துணைத் தலைவர் பதவியிலிருந்து நஸ்ரி ரம்லியையும் தூக்க முயன்றதை அடுத்து மலாக்கா பெர்சத்து தலைவர்கள் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்ததாக நேற்று மலேசியாகினி செய்தி வெளியிட்டிருந்தது.

ரிட்சுவான் ஒரு பிரிவினைவாதி என்று இன்னொரு பெர்சத்து உச்ச மன்ற உறுப்பினரும் கூறினார். அவர் முகைதின் ஏன் மகாதிரின் பதவிக்குக்கூட அடிபோடுகிறார், அதற்காக உச்சமன்றத்தில் ஆதரவு திரட்டுகிறார். என்றாரவர்.

கடந்த வெள்ளிக்கிழமை தனக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது உண்மைதான் என்பதை உறுதிப்படுத்திய ரிட்சுவான், அது கட்சி அமைப்புவிதிகளுக்கு ஏற்பத்தான் செய்யப்பட்டதா என்று வினவினார்.

மாநிலத் தலைவர்களை நியமிப்பது கட்சித் தலைமை என்பதால் அவர்களை அகற்றும் உரிமையும் கட்சித் தலைமைக்குத்தானே உண்டு என்றவர் குறிப்பிட்டார்.

“அவர்கள் (கிளர்ச்சிக்காரர்கள்) மக்கள் கொடுத்த அதிகாரத்துடன் வந்திருப்பதாக கூறிக்கொண்டு நான் பதவி விலக வேண்டும் என்று கூறினார்கள், வந்தவர்கள் ஐந்து பேர்தான்.

“மலாக்கா கிளையை உருவாக்கியதே நான்தான். நானே அதன் முதல் உறுப்பினர். நானே உருவாக்கியதை நானே உடைப்பேனா? ”, என்றவர் வினவினார்.

நஸ்ரியை மஸ்ஜித் தானா துணைத் தலைவர் பதவியிலிருந்து அகற்ற முயல்வதாகக் கூறப்படுவதையும் ரிட்சுவான் மறுத்தார்.

இதனிடையே, பெர்சத்து தலைமைச் செயலாளர் மர்சுகி யஹ்யா, மலாக்கா பெர்சத்து தலைவர்கள் பேச்சுகளின்வழி விவகாரங்களுக்குத் தீர்வுகாண வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

“அவர்கள் அறிக்கைகளை விடுப்பதையும் ஒருவரை மற்றவர் குறைசொல்வதையும் விடுத்துக் கூடிப் பே