மாநிலத்தில் விற்பனையாகாமல் இருக்கும் வீடுகளுக்குத் தீர்வாக, பினாங்கு மாநில அரசு சில திட்டங்களை அறிவித்துள்ளது.
வீடமைப்பு, நகர்புறம் மற்றும் கிராமத் திட்டமிடல் குழுவின் தலைவரான ஜக்டீப் சிங் டியோ, சந்தையில் தற்போதுள்ள வீடுகளில், 20 முதல் 40 விழுக்காடு வரை, மாநிலத்தில் வசிக்காதவர்கள் வாங்க அனுமதிப்பது அத்திட்டங்களில் ஒன்று கூறினார்.
“வாங்கும் தகுதி மற்றும் வங்கிக் கடன் நிராகரிப்பு பிரச்சனைகள் மிக அதிகமாக உள்ளதை நாங்கள் கண்டறிந்தோம், ஆனால் வாங்குவோருக்கு யூனிட் அணுகல்.
“எனவே, நாங்கள் சந்தையில் சில மாற்றங்களை செய்து, வீடு வாங்குபவர்கள் அதிக அளவில் அணுகும் வகையில், இந்தத் துறையை ஊக்குவிக்க உள்ளோம்,” என்று அவர், இன்று ஒரு செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
மலேசியாவில், மேம்பாடு அடைந்துவரும் மாநிலங்களோடு ஒப்பிடுகையில், பினாங்கில் விற்பனையாகாத வீடுகளின் எண்ணிக்கை உயர்வு இன்னும் கட்டுப்பாட்டிலேயே – 2017 முதல், 2,000-லிருந்து 3,000 வீடுகள் – இருப்பதாக அவர் சொன்னார்.
ஜொகூர் மாநிலத்துடன் ஒப்பிடுகையில், அங்கு அதே காலகட்டத்தில் 9,000 வீடுகள் விற்பனை ஆகாமல் இருப்பதாகவும் ஜக்டீப் தெரிவித்தார்.
உயர் வங்கி கடன் நிராகரிப்பு பிரச்சினைகளை நிதி அமைச்சு கையாள உள்ளதாகவும் ஜக்டீப் கூறினார்.
RM1 மில்லியனுக்குக் குறைந்த விலையிலான வீடுகளுக்கு, இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்கு முத்திரை வரி விதிக்கப்படாது என்று நிதி அமைச்சர், லிம் குவான் எங் அறிவித்துள்ளதாகவும் ஜக்டீப் தெரிவித்தார்.