ஆய்வு: 60விழுக்காடு மலாய்க்காரர்களுக்கு ஹரப்பான்மீது அதிருப்தி

கடந்த ஆண்டின் இறுதி மாதங்களில் நாடு முழுக்க மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு அவ்வாய்வில் கலந்துகொண்ட மலாய்காரர்களில் 60 விழுக்காட்டினர் பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்தின்மீது அதிருப்தி கொண்டிருப்பதைக் காண்பித்தது.

அந்த ஆய்வில் கலந்துகொண்ட மலாய்க்காரர்களில் 54.4 விழுக்காட்டினர், மலாய்க்காரர் உரிமைகளையும் அதிகாரப்பூர்வ சமயமாக இஸ்லாத்தையும் நிலைநாட்டுதல் போன்ற மலாய்க்காரர் நலத் திட்டங்களில் அரசாங்கத்துக்கு உண்மையான அக்கறை இல்லை என்று நினைக்கிறார்கள்.

60 விழுக்காட்டுக்கு மேற்பட்டோர் முஸ்லிம்- அல்லாதாரின் கட்டுப்பாட்டில் அரசாங்கம் இருப்பதாகவும் டிஏபி விருப்பப்படிதான் எல்லாம் நடக்கிறது என்றும் நம்புகிறார்கள்.

அந்த ஆய்வை, இல்ஹாம் மையமும் சிந்தனைக் கலமான பினாங்குக் கழகமும் கூட்டாக அக்டோபர் 24-இலிருந்து டிசம்பர் 24வரை நடத்தின.