கோலாலம்பூர் உயர்நீதிமன்றம், RM2.28 பில்லியன் மதிப்புள்ள 1எம்டிபி சம்பந்தப்பட்ட நான்கு குற்றச்சாட்டு வழக்கு விசாரணைக்காக, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் சம்பந்தப்பட்ட 421 ஆவணங்களை வழங்கியுள்ளது.
அத்தகவலை, வழக்கு விசாரணை குழுவுக்குத் தலைமையேற்றிருக்கும் மூத்த பொது வழக்குரைஞர், கோபால் ஶ்ரீ ராம் கோலின் லோரன்ஸ் செகுவேரா முன்னிலையில் தெரிவித்தார்.
இருப்பினும், முன்னாள் மத்திய நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய ஸ்ரீ ராம், நஜிப்பின் 1எம்டிபி நிதி தொடர்பான 21 பணமோசடி வழக்குகள் சம்பந்தப்பட்ட வங்கி ஆவணங்களைக் கோர முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.
“எங்களுக்கு நேரம் தேவைபடுகிறது, வங்கி ஆவணங்களைப் பெற நாங்கள் முயற்சித்து வருகிறோம்,” என்று அவர் கூறினார்.
வழக்கு பிப்ரவரி 26-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.