அடுத்த பொதுத் தேர்தலில், கேமரன் மலையில் மஇகா நிச்சயம் போட்டியிடும்

அடுத்த பொதுத் தேர்தலில், கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் கண்டிப்பாக போட்டியிடுவோம் என்று மஇகா கூறியுள்ளது.

அத்தொகுதி மஇகாவுக்குச் சொந்தமானது, இம்முறை இடைத்தேர்தலுக்காக அந்நாற்காலி பிஎன்–னுக்கு இரவல் கொடுக்கப்பட்டது என்று கட்சியின் தேசியத் தலைவர் எஸ் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

“முன்பு நான் கூறியதுபோல், அத்தொகுதி இரவல் கொடுக்கப்பட்டுள்ளது, பிஎன் –னில் எங்களுக்குள், இது தொடர்பில் ஒரு ‘புரிந்துணர்வு’ உண்டு.

“இம்முறை, பிஎன் வேட்பாளர் ரம்லி முகமட் நோர் வெற்றிபெற்றிருந்தாலும்…. அடுத்த பொதுத் தேர்தலில் மஇகாதான் அங்குப் போட்டியிடும்,” என இன்று கோலாலம்பூரில், மஇகா தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் விக்னேஸ்வரன் கூறினார்.

இடைத்தேர்தலில், தகுதிவாய்ந்த வேட்பாளாரை நிறுத்த வேண்டும் எனும் பிஎன் –னின் கணிப்பு துல்லியமாக இருந்தது என்றும் அவர் சொன்னார்.

“ஒருவேளை, அம்னோ வேட்பாளர் களமிறக்கப்பட்டிருந்தால் கூட தோல்வியைத் தழுவி இருப்போம். சரியான வேட்பாளர் தேர்வே, பிஎன் –னுக்கு வெற்றியைப் பெற்று தந்தது.

‘அடுத்து வரவிருக்கும் செமிஞ்சே இடைத்தேர்தலிலும், பிஎன் சரியான வேட்பளரைத் தேர்ந்தெடுக்கும் என நான் நம்புகிறேன்,” என்றும் அவர் கூறினார்.