கேமரன் தொகுதி 15வது பொதுத் தேர்தலில் மீண்டும் மஇகா கைக்கு வரும்

மஇகா தலைவர் எஸ்.விக்னேஸ்வரன், கேமரன் மலை தொகுதி இப்போது மஇகா உறுப்பினர் அல்லாத பிஎன் வேட்பாளர் ஒருவரிடம் இருந்தாலும் அந்த நாடாளுமன்றத் தொகுதி மஇகாவுக்கே திரும்பி வரும் என்கிறார்.

“அத்தொகுதியில் பிஎன் வேட்பாளர் ரம்லி வெற்றி பெற்றாலும் வருங்காலத்தில் நாங்கள்தான் அங்கு போட்டியிடுவோம்”, என்றவர் நேற்றிரவு மஇகா தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் விளக்கினார்.

ஜனவரி 28-இல் அங்கு நடைபெற்ற தேர்தலில் ரம்லி போட்டியிவதற்கு இடம்கொடுத்து மஇகா போட்டியிடாமல் ஒதுங்கிக் கொன்ட்டது.

அது நல்ல வியூகமாக அமைந்தது. ஒராங் அஸ்லி வேட்பாளரான ரம்லி 3,238 வாக்குகள் பெரும்பாமையில் வெற்றி பெற்றார்.

அந்தத் தொகுதி இரவல்தான் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை விக்னேஸ்வரன் மீண்டும் வலியுறுத்தினார்.

“நான் ஏற்கனவே கூறியது போல் அந்த இடத்தை நாங்கள் பிஎன்னுக்கு இரவல் கொடுத்துள்ளோம். எங்களுக்குள் ஒரு புரிதல் உண்டு. அடுத்த ஆண்டு மஇகா அங்குக் களமிறங்கும்”, என்றவர் சொன்னார்.

கேமரன் மலை வெற்றிக்கு ஒரு சரியான வேட்பாளர் நிறுத்தப்பட்டதுதான் காரணம் என்று குறிப்பிட்ட விக்னேஸ்வரன் எதிர்வரும் செமினி இடைத் தேர்தலிலும் அதே முறை பின்பற்றப்பட வேண்டும் என்றார்.

செமினி இடைத் தேர்தல் மார்ச் 2-இல்.