இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களுக்கு முத்திரை வரி விலக்களிப்பை 300ஆயிரம் ரிங்கிட்டிலிருந்கேள்வி து 1 மில்லியன் ரிங்கிட் வரையிலுமான வீடுகளுக்கு விரிவுபடுத்தியது ஏன் என்று மசீச இளைஞர் தலைவர் நிக்கோல் வோங் எழுப்பியுள்ளார்.
நிதி அமைச்சர் லிம் குவான் எங் வீட்டுடமைத் திட்ட இயக்கத்தை ஓட்டி அந்த வரி விலக்கு கொடுக்கப்படுவதாகக் கூறினார். அதே வேளை வீடு வாங்குவதை ஊக்குவிக்கவும் தேங்கிக் கிடக்கும் சொத்துகளை விற்கவும் மேம்பாட்டாளர்கள் 10விழுக்காடுவரை விலையில் தள்ளுபடி செய்ய முன்வந்துள்ளனர்.
இந்தச் சலுகைகள் குறைந்த வருமானம் பெறும் 40விழுக்காட்டு (பி40)மக்களைவிட உயர் வருமானம் பெறுவோருக்குத்தான் நன்மையாக அமையும் என வொங் கூறினார்.
“அது குறைந்த, நடுத்தர வருமானம் பெறுவோருக்கு உதவப் போவதில்லை.
“அதிகமான வீடுகளைக் கட்டி சொத்துச் சந்தையில் தேக்கத்தை உண்டாக்கிய மேம்பாட்டாளர்களுக்கும் ஆட்சி அதிகாரத்தில் உள்ள உயர் வருமானம் பெறுவோருக்கும் மட்டுமே இது நன்மையாக அமையும்”, என்று வொங் ஓர் அறிக்கையில் கூறினார்.
பி40 தரப்பினருக்கும் மாநகரங்களில் வீடுகள் வாங்கச் சிரமப்படும் புதிய பட்டதாரிகளுக்கும்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றாரவர்.
“அமைச்சு அதிகாரிகள் குளிர்சாதன அறைகளில் அமர்ந்து மேம்பாட்டாளர்களின் அறிக்கைகளைப் படித்துக் கொண்டிராமல் மக்களின் குறைகளைக் காது கொடுத்துக் கேட்க வேண்டும்”, ஏன்று வொங் கூறினார்.