அம்னோவிடமிருந்து, பாஸ் RM90 மில்லியனைப் பெற்றது தொடர்பான எந்தவொரு அதிகாரப்பூர்வப் புகார்களையும் தாங்கள் பெறவில்லை என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) அறிவித்துள்ளது.
இத்தகவலை, அவ்வாணையத்தின் உயர்பதவியில் இருக்கும் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக, தி மலேசியன் இன்சைட், இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அந்நிதி பற்றிய தகவல் வைத்திருப்போர். முன்வந்து புகார் செய்ய வேண்டுமே ஒழிய, வெறுமனே குற்றச்சட்டுகளை சுமத்தக்கூடாது என அவர் கூறியுள்ளார்.
“சட்டபூர்வமான தகவல் உள்ளவர்கள் எங்களிடம் புகார் செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், வெறுமனே குற்றம் சுமத்த வேண்டாம்,” என்று மேற்கோள் காட்டிய பெயர் குறிப்பிடப்படாத அந்த அதிகாரி, 2010 தகவல் தருவோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், தகவலாளர்களின் அடையாளம் இரகசியமாக வைக்கப்படும் என்றார்.
நேற்று, மூத்த செய்தியாளர் ஏ காடிர் ஜாசின், உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், போலிஸ் மற்றும் எம்ஏசிசி விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.