எதிரணிக் கட்சிகளான பிஎன் கட்சிகள், பாஸ் ஆகியவை ஒன்றோடொன்று ஒத்துழைப்பது ஒன்றும் புதிததல்ல என்று மசீச தலைவர் வீ கா சியோங் கூறினார்.
இன்று காலை கோலாலும்பூரில் மசீச-வின் சீனப் புத்தாண்டு உபசரிப்பு நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய வீ, ஆட்சியில் உள்ள அரசாங்கம் அதிகாரத்தை மீறிச் சென்று விடாமல் வரைமுறைப்படுத்துவதுதான் எதிர்க்கட்சிகளின் முடிவான நோக்கமாகும் என்றார்.
“கடந்த காலங்களிலும் எதிர்க்கட்சிகள் ஒன்றோடொன்று ஒத்துழைத்தது உண்டு.
“பக்கத்தான் ரக்யாட்டில் பாஸ் இருந்தபோதுகூட வழக்கத்துக்கு மாறாக எதுவும் நடக்கவில்லையே. டிஏபியும் பாஸ் கட்சியும் நன்கு ஒத்துழைத்தனவே”, என 12வது 13வது பொதுத் தேர்தல்களில் பிஎன்னுக்கு எதிராக பாஸ், டிஏபி, பிகேஆர் ஆகியவை பக்கத்தான் ரக்யாட் கூட்டணியில் இருந்ததைச் சுட்டிக்காட்டினார்.