மருத்துமனையில் உள்ள அஸ்மினைப் பிரதமரின் மனைவி டாக்டர் சித்தி அஸ்மா சென்று கண்டார்

மருத்துவ மனை ஒன்றில் அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பொருளாதார அமைச்சர் முகம்மட் அஸ்மின் அலியைப் பிரதமரின் துணைவியார் டாக்டர் சித்தி அஸ்மா முகம்மட் அலி சென்று கண்டதாக ஒரு டிவிட்டர் செய்தி கூறியது.

அஸ்மின் அலியின் மகள் ஃபாரா அமிரா டிவிட்டரில் அச்செய்தியைப் பதிவிட்டிருந்தார்.

“அருமையான பெண்மணி துன் சித்தி அஸ்மா. அவர், கருணை, கனிவு, அன்பு, இரக்கம் ஆகிய நற்பண்புகளின் இருப்பிடம். அபா@ அஸ்மின் அலியை நலம் விசாரித்ததில் அது தெளிவாகத் தெரிந்தது”, என ஃபாரா நேற்று டிவிட் செய்திருந்தார்.

அந்த டிவிட்டர் பக்கத்தில் படுக்கையில் படுத்திருக்கும் அஸ்மின் அலியுடன் சித்தி அஸ்மா உரையாடுவதைக் காண்பிக்கும் காணொளி ஒன்றும் புகைப்படமொன்றும் பதிவேற்றப்பட்டிருந்தன.

ஆனால், எந்த மருத்துவமனை, எதற்காக அறுவைச் சிகிச்சை போன்ற விவரங்கள் அதில் இல்லை.