அரசாங்க உத்தரவை மதியாத ‘குட்டி நெப்போலியன்கள்’ தண்டிக்கப்பட வேண்டும் என்கிறது பெட்ரியோட்

புதிய அரசாங்கத்தின் உத்தரவுகளை நிறைவேற்றாத அரசு அதிகாரிகள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய பெட்ரியோட் சங்கத் தலைவர் அர்ஷாட் ராஜி கூறினா

“தேசிய நலன் சம்பந்தப்பட்ட விவகாரங்களில்” குறிப்பிட்ட சில அமைச்சுகள் மெத்தனமாக நடந்துகொள்வதாகக் குறை சொல்லப்படுவதை முகம்மட் அர்ஷாட் சுட்டிக்காட்டினார்.

“சில அமைச்சுகளிலும் அரசுத் துறைகளிலும் முந்தைய அரசாங்கத்தை ஆதரிக்கும் அதிகாரிகள் இன்னும் இருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அவர்களின் நடவடிக்கைகள் ஆளும் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு நேர் எதிரானவை.

“பல்வேறு அமைச்சுகளிலும் ஊராட்சி மன்றங்களிலும் இப்படிப்பட்ட குட்டி நெப்போலியன்கள் இருக்கவே செய்கிறார்கள்.

“புதிய அரசாங்கத்தின் உத்தரவுகளை வேண்டுமென்றே அல்லது கவனக் குறைவாக நிறைவேற்றாமலிருக்கும் அதிகாரிகள் அவர்கள் அரசுச் சேவையில் எந்தப் பதவியில் இருந்தாலும் அவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்”, என்றவர் இன்று ஓர் அறிக்கையில் கேட்டுக்கொண்டார்.