இன்று ஜோகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில், கோத்தா திங்கி முன்னாள் எம்பி நூர் இஸானுடின் முகம்மட் ஹருன்மீது 2013-இலும் 2014-லும் ஓர் அச்சிடும் நிறுவனத்திடமிருந்து ரிம50,000 ரொக்கத்தையும் ஒரு துண்டு நிலத்தையும் கையூட்டாகப் பெற்றார் எனக் குற்றஞ்சாட்டது.
நீதிபதி கமருடின் கம்சுன் முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட அவர், இரண்டு குற்றச்சாட்டுகளையும் மறுத்து விசாரணை கோரினார்.
முதலாவது குற்றச்சாட்டில், 2013 செப்டம்பர் 8-இல் , நூர் இஸானுடின், கூட்டரசு நில மேம்பாட்டு நிறுவனத்தில் (பெல்டாவில்) ஒரு இயக்குனராக இருந்தபோது கார்யா ஹிதாயா சென்.பெர்ஹாட்டிடமிருந்து ரிம50,000 வாங்கினார் எனக் கூறப்பட்டது. பணம் அவருடைய மே பேங்க் கணக்கில் போடப்பட்டது.
இரண்டாவது குற்றச்சாட்டின்படி அவர், அதே நிறுவனத்திடமிருந்து முக்கிம் கோத்தா திங்கியில், ரிம180,000 மதிப்புள்ள 0.421 ஹெக்டேர் நிலத்தைக் கையூட்டாகப் பெற்றுக் கொண்டிருக்கிறார்.
பெல்டாவின் அச்சிடும் வேலைகளைச் செய்து கொடுக்கும் குத்தகையைப் பெறுவதற்காக அந்நிறுவனம் இந்தக் கையூட்டுகள் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
நீதிமன்றம் ரிம40,000 பிணையில் நூர் இஸானுடினை விடுவித்தது. வழக்கு மார்ச் 27-இல் மறுபடியும் விசானைக்கு வரும்.
-பெர்னாமா